கணினித் தமிழ் – தகவல்களும் தளங்களும்

கணினித் தமிழ்

கணினித் தமிழ் - தகவல்களும் தளங்களும்

காலத்திற்கேற்ற அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிகளை உள்வாங்கும் மொழியும் இனமுமே காலங்களைக் கடந்து நிலைத்திருக்கும் ஆற்றல் கொண்டவையாகின்றன. அவ்வகையில் இன்றைய கணினியுகத்தில் துரித செயல்பாட்டிற்கும் தொழில் நுட்பத் தேவைக்கும் ஏற்ப  நாள்தோறும் புதுப்புது செயலிகள்  பல மொழிகளில் தோற்றுவிக்கப்பட்டு வருகின்றன. உலகமொழிகளுக்கு இணையாக தமிழ்மொழியிலும் வல்லுநர்கள் பல செயலிகளை உருவாக்கி வருகின்றனர். தமிழ் கற்கும் மாணவர்கள். ஆர்வலர்கள் இவற்றை அறிந்து பயனுற வேண்டும் என்னும் நோக்கில்  கீழ்க்கண்ட கணினித்தமிழ் தகவல்களும் தளங்களும் இப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

எளிய தமிழ்த் தட்டச்சு செயலிகள் (Application)

அழகி செயலி

இச்செயலி ஒரு ஒலிவரிவடிவ மாற்றி (Phonetic Translator).  பன்மொழி எழுத்துருக்களைத் தன்னகத்தே கொண்டது.    அழகி செயலியை அலைபேசி அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்து, பின்னர் நாம் விரும்பும் தமிழ்ச் சொற்களை,  ஒலிப்புமுறைக்கேற்ப   ஆங்கிலமொழியில் தட்டச்சு செய்தால் இச்செயலி  தமிழ் வரிவடிவத்தில் அவற்றை  மொழிமாற்றம் செய்து கொடுக்கும். தமிழ்  தட்டச்சுமுறை நமக்குத் தெரியவில்லை என்றாலும் இச்செயலியைப் பயன்படுத்தி நாம் எளிதில் தமிழில் மட்டுமல்ல, பல மொழிகளில் தட்டச்சு செய்ய இயலும்.  இதுபோல் NHM Writer செயலியும் வரிவடிவ மாற்றியாகச் செயல்பட்டு மொழிமாற்றம் செய்யப் பயன்படுகிறது.

அழகி செயலி பதிவிறக்க இணைப்பு: (Download Link)
https://www.azhagi.com/azhagi-free-apps-store.html#downloads

அழகி செயலி பதிவிறக்கமும் பயன்பாட்டு முறையும்:  (YouTube Link)
https://www.youtube.com/watch?v=BOhZ3ZJ6EBw 

என்.எச்.எம்.ரைட்டர் (NHM writer)
https://indiclabs.in/products/writer/

தமிழ் எழுத்து, சொல் பிழை திருத்திகள்

நாவி சந்திப்பிழைதிருத்தி;

ஆங்கிலத்தில் நாம் எழுதுபவற்றில் உள்ள  இலக்கணப்பிழைகளைத்  திருத்தம் செய்ய பல செயலிகள் உள்ளதை நாம் அறிவோம். அது போல் தமிழிலும் சந்திப் பிழைகளைத் திருத்த நாவி என்னும் செயலி பயன்படுகிறது.  நாம் எழுதுவனவற்றை சிறு சிறு  பத்திகளாக இச்செயலியினுள் உள்ளீடு செய்து  சில நொடிகளில் அதிலுள்ள சந்திப்பிழைகளைத் திருத்தம் செய்துவிடலாம்.

 https://dev.neechalkaran.com/p/naavi.html?m=1

வாணி சொற்பிழை திருத்தி:

சந்திப்பிழை திருத்தி போலவே, நாம் எழுதும் சொற்களில் உள்ள இலக்கணப் பிழைகளை முறையே திருத்த இச்செயலி உதவுகிறது. நாம் எழுதுவனவற்றை சிறு சிறு  பத்திகளாக இச்செயலியினுள் உள்ளீடு செய்து  சில நொடிகளில் அதிலுள்ள சொற்பிழைகளைத் திருத்தம் செய்துவிடலாம்.

 https://vaani.neechalkaran.com/

முக்கியத் தமிழ் இணையதள இணைப்புகள்

சங்க காலம் முதல் தற்காலம் வரை  தமிழில் தோன்றியுள்ள இலக்கியங்களில்  பெரும்பாலானவற்றை  இணையத்தில் எளிதில் கற்கும் வகையில் பல இணையதளங்கள் நூல்களை பதிவேற்றம் செய்து வைத்துள்ளன. இத்தளங்களில் சென்று தமிழ் புத்தகங்களைப் படிப்பதோடு மட்டுமின்றி அவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
 https://www.cict.in/

மதுரை தமிழிலக்கிய மின்னூல் தொகுப்புத் திட்டம்
https://www.projectmadurai.org/

தமிழ் இணையக் கல்விக்கழகம்
https://www.tamilvu.org/ta/library-libcontnt-273141

தமிழ்ச் சுவடிகள் தொகுப்பு
https://www.tamilvu.org/ta/library-suvadi-html-suvd0ind-162080

ரோஜா முத்தைய்யா ஆராய்ச்சி நூலகம்
https://rmrl.in/collection/

தமிழ் மின்னூல் நூலகம்
 https://noolaham.org
 https://www.chennailibrary.com/

பக்தி இலக்கியங்கள் மட்டும் கொண்ட இணைய தளங்கள்

சைவ இலக்கியங்கள்
https://thevaaram.org/
https://shaivam.org/

வைணவ இலக்கியங்கள்
https://www.dravidaveda.org/

தமிழ் இலக்கியச் சொல்லடைவுகள்
https://tamilconcordance.in/
https://thanithamizhakarathikalanjiyam.github.io/

சங்க இலக்கியச் சொல்லடைவுகள் அலைபேசி செயலி
https://play.google.com/store/apps/details?id=jeyapalasingham.SangamSearch

 தமிழ் அகராதிகள்
https://agarathi.com/word/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF
https://eluthu.com/dictionary/tamil-tamil.php
https://www.valaitamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF–tamil-dictionary102016.html
https://www.protamil.com/tamil-dictionaries/chennai-univercity-tamil-lexicon-dictionary/tamil-lexicon-dictionary-2230.html
https://ta.wikisource.org
https://vaani.neechalkaran.com/word

விக்கிபீடியா – தமிழ்த் தகவல் கலைக்களஞ்சியம்
https://ta.wikipedia.org/

தமிழ் மரபு அறக்கட்டளை – தொல்லியல் தரவுகள், பழந்தமிழ் நூல்கள், தமிழ்க்களஞ்சியங்கள் உள்ளடக்கியவை.
https://www.tamilheritage.org/

காணொளி உருவாக்கம்

நம் சிந்தனையில் உதிப்பவற்றை எழுதியும் ஒலிப்பதிவும் செய்வது போல காணொளியாகவும் உருவாக்க எளிய பல செயலிகள் உள்ளன.

திரைப்பதிவிகள் (Screen Recorders)

சமீபகாலமாக அலைபேசி, கணினி ஆகியவற்றில் திரைப்பதிவி செயலிகள்உள்ளீடு செய்யப்பட்டே விற்பனைக்கு வருகின்றன. அவ்வாறு  இல்லாத போதும் கூகுள் தளத்தில் சென்று, ஸ்கிரின்ரெகார்டர், ஸ்கிரின் கேஸ்டிஃபைங்,  போன்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்து தமிழில் காணொளிகளை எளிதில் உருவாக்கிட இயலும். மேலும் வின்டோஸ் 10 போன்ற இயங்குதளங்களில்  பி.பி.டிக்களை உருவாக்கி அவற்றிலேயே ஒலி, ஒளிப்பதிவு செய்து  தரமானத் தமிழ்க் காணொளிகளை உருவாக்கலாம்.

முனைவர் ஜ.வள்ளி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
சி.டி.டி.இ.மகளிர் கல்லூரி, சென்னை -11.

Leave a Reply