வடசென்னை பொருளாதாரம்

செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி மற்றும் ரேவதி ஹோம் நீட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம்

வடசென்னை பொருளாதாரம்

23.10.2026

பேரன்புடையீர், வணக்கம்.

செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, தமிழ்நாட்டின்  முதல் பெண்கள் சுயநிதிக் கல்லூரி ஆகும். 1964-இல் செவாலியர் திரு. டி. தாமஸ் அவர்களால் புனிதமேரி கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டு ஆல்போல் தழைத்து வளர்ந்தன. இவ்வளர்ச்சி நிலையின் ஒரு கட்டமாக 1985 இல் திருமதி. எலிசபெத் தாமஸ் அம்மையாரால் எம் கல்லூரி நிறுவப்பட்டு, கடந்த 41 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. சி.டி.டி. கல்வி அறக்கட்டளை 2002 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சென்னை, உயர்நீதி மன்ற மேனாள் நீதியரசர் உயர்திரு. ஜே. கனகராஜ் அவர்களைத் தலைவராகவும், உயர்திரு இல. பழமலை இ.ஆ.ப.ஓய்வு அவர்களைச் செயலாளர் மற்றும் தாளாளராகவும் கொண்டு திறம்பட இயங்கி வந்தது. தற்போது சென்னை உயர்நீதி மன்ற மேனாள் நீதியரசர் உயர்திரு. பி. கோகுல்தாஸ் அவர்கள் அறக்கட்டளையின் தலைவராகப் பொறுப்பேற்றுச் சிறப்புற செயல்பட்டு வருகின்றார்கள். எமது கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இணைவு பெற்று இளம் அறிவியல், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளை வழங்கி வருகின்றது. 2500 – க்கும் மேற்பட்ட மாணவியர் பயிலும் எம் கல்லூரி NAAC – தேசியத் தர மற்றும் மதிப்பீடு ஆணையத்தின் இரண்டாம் சுழற்சியில் ‘A’ தரச்சான்று வழங்கப் பெற்றுச் சென்னை மாவட்டத்தின் தனித்துவமிக்க பெண்கள் கல்லூரியாகத் திகழ்கின்றது. எமது கல்லூரி கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளில் சிறந்து விளங்கும் அனுபவமிக்க பேராசிரியர்களைத் தன்னகத்தே கொண்டு செயல்பட்டு வருகின்றது. மாணவர்கள் அறிவு சார்ந்த தேடலை அணுக வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆண்டுதோறும் கல்லூரியில் துறைசார்ந்த பன்னாட்டுக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் எங்கள் செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி மற்றும் பெரம்பூர் ரேவதி ஹோம் நீட்ஸ் இணைந்து நடத்தும் ‘ வடசென்னை பொருளாதாரம் என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கு 23-10-2026 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கின்றது.

கருத்தரங்கின் நோக்கம்

வரலாற்றுச் சிறப்புமிக்க வடசென்னை, தொழிற்சாலைகள், துறைமுகம், மின்நிலையங்கள் மற்றும் பல்வேறு உற்பத்தி நிறுவனங்களின் மையமாக விளங்கி வருகிறது. வடசென்னை தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. ‘வடசென்னை பொருளாதாரம்’ என்ற தலைப்பிலான இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம், வடசென்னையின் தொடக்கக் காலப் பொருளாதார நிலை, இன்றையப் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை முன்னேற்றம், வணிகச் சூழல், துறைமுகம் சார்ந்த பொருளாதாரப் பங்களிப்புகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் நிலை, மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரம் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவுகளும் மாற்றங்களும் ஆகியவற்றை ஆராய்ந்து ஆவணப்படுத்துவதாகும். இக்கருத்தரங்கு, வடசென்னையின் பொருளாதார நிலையை அறிந்து கொள்வதற்கும் எதிர்காலத்தில் வடசென்னையின் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய அணுகுமுறைகள், அரசின் திட்டங்கள்,  தொழில்முனைவோர் பெருக்கம் ஆகியன உருவாவதற்கும் வழிவகுக்கும்.

Conference Objective

  • To study the region’s industrial progress, commercial ecosystems, and the strategic economic contributions of port-led development and power infrastructure. 
  • To examine the condition of Micro, Small, and Medium Enterprises (MSMEs) and the livelihood of the local community. 
  • To document the economic setbacks, challenges, and shifts triggered by modern technological advancements.

Following the success of its inaugural conference on Education and the second edition on Industries that contributed to the region’s development, Chevalier T. Thomas Elizabeth College for Women (CTTE) announces the third edition of its flagship research series on North Chennai.

As part of a four-part academic initiative documenting the region’s evolution, this edition places Economics at the core of inquiry. The conference will examine the key drivers of North Chennai’s economic landscape and its pivotal role in Tamil Nadu’s broader growth trajectory.

By examining the interplay between historical commerce, industrial clusters, informal labor markets, and state policy, this conference documents the complex economic evolution of North Chennai and its integration into Tamil Nadu’s broader development narrative. The forum provides an interdisciplinary platform for economists, industry leaders, scholars, policymakers, civil society advocates, and students to analyze how businesses, workers, and local communities drive—and experience—the region’s structural transformation. 

Selected research papers, case studies, and panel proceedings will form the third volume in CTTE’s four-part publication series, documenting the rich economic history, structural changes, and future potential of North Chennai.

கருத்தரங்கப் பொருண்மை 

‘வடசென்னை பொருளாதாரம்’ என்ற தலைப்பிலான இப்பன்னாட்டுக் கருத்தரங்கிற்குப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் ஆகியோரிடமிருந்து பின்வரும் தலைப்புகளையொட்டி கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

  • வடசென்னையின் பொருளாதார வரலாறு: காலனித்துவ காலம் முதல் இன்று வரை.
  • வடசென்னையின் வணிக வளர்ச்சி.
  • துறைமுகம் மற்றும் கடல்சார் பொருளாதாரம்.
  • சென்னைப் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், எண்ணூர் அனல் மின் நிலையம்போன்ற தொழில் நிறுவனங்களின் பொருளாதாரப் பங்கு.
  • மீனவர் சமூகங்களின் வாழ்வாதாரங்ள்
  • வடசென்னையின் சாலையோர வணிகம்,
  • வடசென்னையின் சிறு தொழில்கள், கைவினைத் தொழில்கள்.
  • இரயில், சாலை, துறைமுக இணைப்புகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து பொருளாதாரம்.
  • மருத்துவத் துறை சார்ந்த பொருளாதாரம்.
  • தொழிலாளர் வர்க்கத்தின் வடசென்னை குடியேற்றமும் வேலைவாய்ப்பும்.
  • பெண்களின் பங்களிப்பு: சிறு தொழில்கள், சுயஉதவிக்குழுக்கள் மற்றும் தொழில்முனைவு.
  • வடசென்னையின் வணிக சந்தைகள்
  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதிய சேவைத் துறைகளின் வடசென்னை மீதான தாக்கம்.
  • வடசென்னை வளர்ச்சியில் அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பொருளாதார விளைவுகள்
  • கல்வித் துறை சார்ந்த பொருளாதார வளர்ச்சி நிலைகள்

    போன்ற தலைப்புகளில் வடசென்னையை மையப்படுத்தி ஆய்வாளர்கள் கட்டுரைகள் வழங்கலாம்.

     புள்ளி விவரங்கள், களஆய்வு, நேர்காணல்கள், அரசு அறிக்கைகள் மற்றும் வரலாற்று ஆவணங்களை ஆதாரங்களாகப் பயன்படுத்துவது கட்டுரையின் தரத்தை உயர்த்தும்.

Conference Themes

For the international conference titled “The Economy of North Chennai,” researchers are invited to present papers centering on North Chennai under the following topics:

  • The economic history of North Chennai: From the colonial era to the present day.
  • Commercial growth of North Chennai.
  • Port and maritime economy.
  • The economic role of industrial enterprises like Chennai Petroleum Corporation Limited (CPCL) and Ennore Thermal Power Station (ETPS).
  • Livelihoods of fishing communities.
  • Street vending and informal commerce in North Chennai.
  • Small-scale industries and handicrafts in North Chennai.
  • Rail, road, port connectivity, and logistics economy.
  • The economics of the healthcare sector.
  • Working-class migration and employment opportunities in North Chennai.
  • Women’s contribution: Small businesses, Self-Help Groups (SHGs), and entrepreneurship.
  • Commercial markets of North Chennai.
  • The impact of Information Technology (IT) and new service sectors on North Chennai.
  • Government schemes and their economic outcomes in the development of North Chennai.
  • Economic growth trends related to the education sector.

Sources for Research:

  • Books
  • Field data and surveys
  • Internet sources
  • Newspaper reports
  • Interviews and site visits
  • Industrial records

ஆய்வுக் களங்கள்

  • நூல்கள்
  • கள ஆய்வுத் தகவல்களும் தரவுகளும்
  • இணையம்
  • பத்திரிகை செய்திகள்
  • நேர் காணல்
  • தொழிற்சாலைகள்

விதிமுறைகள்

  • கட்டுரைகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் இருமொழிகளிலும் வரவேற்கப்படுகின்றன.
  • ஆய்வுக் கட்டுரை ஆய்வாளரின் சொந்த முயற்சியில் அமைந்ததாய் இருத்தல் வேண்டும். வேறெந்த ஊடகங்களிலோ அல்லது கருத்தரங்குகளிலோ வெளிவராததாய் இருத்தல் வேண்டும்.
  • கட்டுரை தலைப்பின் கீழ் கட்டுரையாளரின் பெயர், பணி, முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை சரியான முறையில் பிழைகள் இன்றி இருத்தல் வேண்டும்.
  • ஆய்வுக்கட்டுரைகள் தட்டச்சு செய்யப்பட்டு சொற்கோப்பில் (Word Format) A4 தாளில் 12 புள்ளி அளவில் 1.5 அளவு வரி இடைவெளியுடனும் யூனிகோடு எழுத்துருவில் 8 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • ஆங்கிலக் கட்டுரைகள் Times New Roman எழுத்துருவிலும் சொற்கோப்பிலும் (Word Format) 8 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • கட்டுரையில் முன்னுரை, உள்தலைப்புகள், துணை நூற்பட்டியல் ஆகியவை தெளிவாக இடம் பெறல் வேண்டும்.
  • கட்டுரை கள ஆய்வு(Field work) தரவுகளாக இருப்பின், தகவல்களைத் தங்களோடு பகிர்ந்தவரின் பெயர், பணி, முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றைக் கட்டுரையின் கடைசிப் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
  • ஆய்வுக் கட்டுரைகளுக்குப் பயன்படுத்தப்படும் நூல்கள், ஆய்விதழ்கள் மற்றும் பிற தரவுகள் துணைநூற்பட்டியலில் சரியான முறையில் அகர வரிசையில் அமைந்திருக்க வேண்டும்.
  • ஆய்வுக் கட்டுரைகள் பிழையின்றி நுட்பமானவையாகச் சரிசெய்யப்பட்டு அனுப்புதல் வேண்டும்.
  • கட்டுரைகளைத் திருத்தவோ சுருக்கவோ கருத்தரங்கக் குழுவிற்கு உரிமை உண்டு.
  • வல்லுநர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மதிப்பீடு செய்யப்பட்டு ISBN எண்ணுடன் ஆய்வுக் கோவையாக வெளியிடப்படும்.
  • கட்டுரை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
  • கட்டுரை அனுப்ப வேண்டிய இறுதி நாள்: 31-12-2026
  • கட்டுரையாளர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தியதற்கான ஆவணத்தை (PROOF) கட்டுரையுடன் இணைத்தல் வேண்டும்.

Guidelines for Article Submission

  • Articles are welcome in both Tamil and English.
  • The research paper must be the original work of the author and should not have been published or presented elsewhere in any medium or conference.
  • Below the article title, the author’s name, designation, address, phone number, and email ID must be mentioned clearly without any errors.
  • Research papers must be typed in Word format using Times New Roman font in 12-point font size with 1.5 line spacing, and should not exceed 8 pages. Tamil articles must be typed in Unicode font.
  • If the article is based on fieldwork, details of the individuals who shared the information—such as their name, designation, address, and phone number—must be clearly mentioned on the last page of the article.
  • All books, journals, and other sources used in the article must be listed in the bibliography in proper alphabetical order.
  • Articles must be edited and submitted error-free.
  • The conference committee reserves the right to edit or condense the submitted articles.
  • Selected research papers, chosen by experts, will be evaluated and published as a research volume with an ISBN number.
  • Last date for submission: 30-09-2025
  • Authors must attach proof of registration fee payment along with the article.
கட்டணம் செலுத்த வேண்டிய விவரம்

Bank Name: State Bank of India
Beneficiary Name: C.T.T.E. College
Branch: Perambur, Chennai
Account Number: 10313551041
IFSC Code: SBIN0002256
Address: 1/110, Madhavaram High Road, Perambur, Chennai-11

The registration fee can be paid through NEFT (or) G-pay using the bank transfer option.

கட்டண விவரம்
  • பேராசிரியர்கள், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் ஆய்வறிஞர்கள் ரூ. 1000
  • ஆய்வு மாணவர்கள் / கல்லூரி மாணவர்கள் ரூ. 750
Patrons

Honourable Justice . B. Gokuldas
Former Judge , Madras High Court,
Chairman, C.T.T.E. Trust.

Thiru. L. Palamalai I.A.S. (Retd.)
Managing Trustee & Correspondent,
C.T.T.E. Trust.

Dr. S. Sridevi
Principal,
C.T.T.E. College for Women.

Dr. P. J. Queency Asha Dhas
Vice-Principal,
Dean of Research & Assistant Professor,
Department of Corporate Secretaryship,
C.T.T.E. College for Women.

Mr. S. N. Thiyagarajan
Founder,
Revathi Home Needs.

Mr. T. Manivannan
Chairman,
Revathi Home Needs.

Mrs. M. Manjula
Managing Director,
Revathi Home Needs.

Mr. M. Kumaragurubaran
Managing Director,
Revathi Home Needs.

Mrs. K. Rajalakshimi
Managing Director,
Revathi Home Needs.

Mr. Charles Fransic
General Manager,
Revathi Home Needs.

Advisory Committee

Dr. Sumuki Padmanabhan
Chief Librarian,
CTTE College for Women

Miss. S. Gayathri
Sales Manager,
Revathi Home Needs.

Mr. X. Jerald Vinoth Kumar
Purchase Head,
Revathi Home Needs.

Mr. D. Mari Ganesh
Marketing Manager,
Revathi Home Needs.

Mr. C. A. Alex Babu
General Manager,
Millennium Papier India PVT Limited.

Coordinators

Mrs. M. Priyadharshini
Assistant Professor, Department of English,
CTTE College for Women

Mrs. J. Mary Catherine
Head, Department of Computer Science,
CTTE College for Women

Dr. A. Kasthuri
Assistant Professor, Department of Tamil,
CTTE College for Women