
பூ பூத்திருக்கிறது! புன்னகைக்கிறது!
புத்துயிர் ஊட்டி மகிழ்விக்கிறது
அடுத்த நாள் அது உதிர்கின்றது
அதை மறந்து மரம் தழைக்கின்றது!
பூக்கள் தினம் தினம் பூக்கின்றன
பிறந்து பிறந்து மடிந்து மடிந்து
எதைப் பற்றியும் கவலைப்படாமல்
தங்கள் வாழ்க்கையைப் பூர்த்தி செய்கின்றன!
எதையும் கண்டு கொள்ளாமல்
மரங்களும் வாழ்ந்து கொண்டேயிருக்கும்!
முனைவர் சு. ஸ்ரீதேவி
முதல்வர்
செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி