காலந்தோறும் தமிழரின் அரசியல் பண்பாட்டு வரலாறு

செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி மற்றும் அகில் பதிப்பகம், சென்னை

காலந்தோறும் தமிழரின் அரசியல் பண்பாட்டு வரலாறு

14.08.2026

கருத்தரங்க நோக்கம்

தமிழரின் அரசியல் மற்றும் பண்பாட்டு வரலாறு சங்க காலம் முதல் இன்றைய காலம் வரை பல்வேறு மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கண்டுள்ளது. அந்த வரலாற்றுப் பயணத்தை ஆராய்ந்து, தமிழரின் ஆட்சி முறைகள், சமூக அமைப்புகள், பண்பாட்டு மரபுகள், மொழி வளர்ச்சி, இலக்கியப் பங்களிப்புகள் மற்றும் அரசியல் சிந்தனைகளின் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ளும் விதமாக இக்கருத்தரங்கம் அமைய உள்ளது. காலந்தோறும் ஏற்பட்ட சமூக மற்றும் அரசியல் மாற்றங்கள் தமிழர் வாழ்க்கை முறையிலும் பண்பாட்டிலும் ஏற்படுத்திய தாக்கங்களை ஆய்வு செய்து, இன்றைய தலைமுறைக்குத் தமிழரின் வரலாற்றுப் பெருமையையும் பண்பாட்டு அடையாளத்தையும் எடுத்துரைப்பது இக்கருத்தரங்கின் நோக்கமாகும்.

கருத்தரங்கப் பொருண்மை 

செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, வடசென்னையில் அமைந்துள்ள முதல் பெண்கள் சுயநிதிக் கல்லூரி ஆகும். 1964 இல் செவாலியர் திரு. டி.தாமஸ் அவர்களால் புனிதமேரி கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டு ஆல் போல் தழைத்து வளர்ந்தன. இவ்வளர்ச்சி நிலையின் ஒரு கட்டமாக 1985 இல் திருமதி. எலிசபெத் தாமஸ் அம்மையாரால் இக்கல்லூரி நிறுவப்பட்டு, கடந்த 40 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. 2002 ஆம் ஆண்டு முதல் சி.டி.டி.கல்வி அறக்கட்டளை தோற்றுவிக்கப்பட்டு அதன் தலைவர், நீதியரசர் தெய்வத்திரு, ஜே.கனகராஜ் (முன்னாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்) அவர்களும் திரு.இல.பழமலை, இ.ஆ.ப.,ஓய்வு (நிர்வாக அறங்காவலர் மற்றும் தாளாளர்) அவர்களும் தற்போது தலைவராகவுள்ள, மாண்புமிகு நீதியரசர் திரு.பி.கோகுல்தாஸ் (முன்னாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்) அவர்களும் அறக்கட்டளை மற்றும் நிர்வாக உறுப்பினர் உள்ளிட்டோரும் இக்கல்லூரியைத் திறம்பட வழிநடத்தி அரும்பணியாற்றி வருகின்றனர். சி.டி.டி.இ.கல்லூரி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இக்கல்லூரி, சென்னைப் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இணைவு பெற்று, கலை மற்றும் அறிவியல் இளங்கலை, முதுகலை, போன்ற பட்டப்படிப்புகளைக் கற்பித்து வருகிறது. 2500க்கும் மேற்பட்ட மாணவியர் கற்கும் இக்கல்லூரி, NAAC-தேசியத் தர மற்றும் மதிப்பீடு ஆணையத்தின் இரண்டாம் சுழற்சியில் ‘A’ மதிப்பு பெற்று, சென்னை மாவட்டத்தின் தனித்துவமிக்க பெண்கள் கல்லூரியாகத் திகழ்கின்றது.

ஆய்வுக் களங்கள்

  • சங்க இலக்கியங்கள்
  • சங்கம் மருவிய கால இலக்கியங்கள்
  • பக்தி இலக்கியங்கள்
  • காப்பியங்கள்
  • சிற்றிலக்கியங்கள்
  • தற்கால இலக்கியங்கள் மற்றும்
    இவை போன்ற பொருண்மையிலான பல்வேறு களங்களில் ஆய்வுக் கட்டுரைகள் அமையலாம்.

விதிமுறைகள்

  • ஆய்வுக்கட்டுரை ஆய்வாளரின் சொந்த முயற்சியில் அமைந்ததாய் இருத்தல் வேண்டும். வேறு எந்த ஊடகங்களிலோ அல்லது கருத்தரங்குகளிலோ வெளிவராததாய் இருத்தல் வேண்டும்.
  • கட்டுரைகள் இலக்கணப் பிழையின்றி, ஆய்வியல் நெறிமுறைகளின் படி எழுதப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.
  • ஆய்வுக் கட்டுரைகள் உரிய மேற்கோள்கள், துணைநூற் பட்டியலுடன் இருத்தல் வேண்டும்.
  • சான்றெண் விளக்கத்தில் ஆசிரியர் பெயர், நூல் பெயர், பக்க எண் இடம் பெற வேண்டும். துணைநூல் பட்டியலில் ஆசிரியர் பெயர், நூல் பெயர், பதிப்பு, ஆண்டு, பதிப்பகத்தின் முழு முகவரி ஆகியவை பதிவு செய்யப்பட்டு அகர வரிசையில் அமைந்திருக்க வேண்டும்.
  • கட்டுரையின் தலைப்பின் கீழ் கட்டுரையாளரின் பெயர் கல்விசார் முகவரி , தொடர்பு முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை சரியான முறையில் பிழைகள் இன்றி இருத்தல் வேண்டும். (தாங்கள் பதிவு செய்யும் பெயர் தான் சான்றிதழில் அச்சிடப்படும்).
  • ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் A4 தாளில் 1.5 வரி இடைவெளியுடன் பாமினி எழுத்துருக்களில் 12 புள்ளி அளவில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் தட்டச்சு செய்து, சரி பார்த்து அனுப்ப வேண்டும்.
  • கட்டுரையாளர்கள் தங்களின் கட்டுரைகளுக்கானத் திரட்டல் (Plagiarism) அறிக்கையைச் சமர்பிக்க கட்டுரையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
  • கட்டுரைகள் ஆய்வு வல்லுநர் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டுக் கருத்தரங்க நாளன்று ISBN எண்ணுடன் நூலாக வெளியிடப்படும்.
  • நூலாக்கம் கருதி, கட்டுரைகளைத் திருத்த மதிப்புக் குழுவிற்கு உரிமை உண்டு.
  • கருத்தரங்கிற்கு வர இயலாதவர்கள் புத்தகம் மற்றும் சான்றிதழ் அனுப்புவதற்கான செலவாக ரூ.150 /- சேர்த்து அனுப்ப வேண்டும்.
  • கருத்தரங்கில் பங்கேற்பாளராகக் கலந்து கொள்பவர்கள் ரூ. 200 /- வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் (சான்றிதழ் வழங்கப்படும்).
  • கட்டுரை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி; t[email protected]
  • கட்டுரை அனுப்ப வேண்டிய இறுதி நாள்: 30.06.2026
  • கட்டுரையாளர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தியதற்கான ஆவணத்தை(PROOF) கட்டுரையுடன் இணைத்தல் வேண்டும்.
கட்டணம் செலுத்த வேண்டிய விவரம்

Bank Name: State Bank of India
Beneficiary Name: C.T.T.E. College
Branch: Perambur, Chennai
Account Number: 10313551041
IFSC Code: SBIN0002256
Address: 1/110, Madhavaram High Road, Perambur, Chennai-11

The registration fee can be paid through NEFT (or) G-pay using the bank transfer option.

கட்டண விவரம்
  • பேராசிரியர்கள் /துறைசார் வல்லுநர்கள் – ரூ.1000
  • ஆய்வாளர்கள் & மொழி ஆர்வலர்கள் -ரூ. 700
  • இளங்கலை& முதுகலை மாணவர்கள்- ரூ.500
  • கருத்தரங்கப் பங்கேற்பாளர்கள் ரூ.200
    (சான்றிதழ் வழங்கப்படும்)
கருத்தரங்கப் புரவலர்கள்
கருத்தரங்க நெறியாளர்

மாண்புமிகு நீதியரசர் திரு.பி.கோகுல்தாஸ்
முன்னாள் நீதிபதி,
சென்னை உயர்நீதிமன்றம் தலைவர்,
சி.டி.டி. கல்வி அறக்கட்டளை.

திரு.இல.பழமலை (இ.ஆ.ப-ஓய்வு)
நிர்வாக அறங்காவலர் மற்றும் தாளாளர்
சி.டி.டி. கல்வி அறக்கட்டளை.

முனைவர் எஸ்.ஸ்ரீதேவி
முதல்வர்
சி.டி.டி.இ. மகளிர் கல்லூரி.

கருத்தரங்க ஆலோசனைக் குழு
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்

முனைவர் பொ. ஜீ. குயின்சி ஆஷா தாஸ்
துணைமுதல்வர்
சி.டி.டி.இ. மகளிர் கல்லூரி.

முனைவர் க. பிரீதா
மொழித்துறைத் தலைவர்
சி.டி.டி.இ. மகளிர் கல்லூரி.

முனைவர் தோ. எழிலரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
தொடர்பு எண்: 98408 56728

கருத்தரங்க ஒருங்கிணைப்புக் குழு

முனைவர் ஜ. வள்ளி
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை

முனைவர் பா. அனிதா
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை

முனைவர் அ. விமலாராணி
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை

முனைவர் அ. கஸ்தூரி
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை