
பேரன்புடையீர், வணக்கம்.
செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, தமிழ்நாட்டின் முதல் பெண்கள் சுயநிதிக் கல்லூரி ஆகும். 1964-இல் செவாலியர் திரு. டி. தாமஸ் அவர்களால் புனிதமேரி கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டு ஆல்போல் தழைத்து வளர்ந்தன. இவ்வளர்ச்சி நிலையின் ஒரு கட்டமாக 1985 இல் திருமதி. எலிசபெத் தாமஸ் அம்மையாரால் எம் கல்லூரி நிறுவப்பட்டு, கடந்த 41 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. சி.டி.டி. கல்வி அறக்கட்டளை 2002 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சென்னை, உயர்நீதி மன்ற மேனாள் நீதியரசர் உயர்திரு. ஜே. கனகராஜ் அவர்களைத் தலைவராகவும், உயர்திரு இல. பழமலை இ.ஆ.ப.ஓய்வு அவர்களைச் செயலாளர் மற்றும் தாளாளராகவும் கொண்டு திறம்பட இயங்கி வந்தது. தற்போது சென்னை உயர்நீதி மன்ற மேனாள் நீதியரசர் உயர்திரு. பி. கோகுல்தாஸ் அவர்கள் அறக்கட்டளையின் தலைவராகப் பொறுப்பேற்றுச் சிறப்புற செயல்பட்டு வருகின்றார்கள். எமது கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இணைவு பெற்று இளம் அறிவியல், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளை வழங்கி வருகின்றது. 2500 – க்கும் மேற்பட்ட மாணவியர் பயிலும் எம் கல்லூரி NAAC – தேசியத் தர மற்றும் மதிப்பீடு ஆணையத்தின் இரண்டாம் சுழற்சியில் ‘A’ தரச்சான்று வழங்கப் பெற்றுச் சென்னை மாவட்டத்தின் தனித்துவமிக்க பெண்கள் கல்லூரியாகத் திகழ்கின்றது. எமது கல்லூரி கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளில் சிறந்து விளங்கும் அனுபவமிக்க பேராசிரியர்களைத் தன்னகத்தே கொண்டு செயல்பட்டு வருகின்றது. மாணவர்கள் அறிவு சார்ந்த தேடலை அணுக வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆண்டுதோறும் கல்லூரியில் துறைசார்ந்த பன்னாட்டுக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் எங்கள் செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி மற்றும் பெரம்பூர் ரேவதி ஹோம் நீட்ஸ் இணைந்து நடத்தும் ‘ வடசென்னை பொருளாதாரம் என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கு 23-10-2026 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கின்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க வடசென்னை, தொழிற்சாலைகள், துறைமுகம், மின்நிலையங்கள் மற்றும் பல்வேறு உற்பத்தி நிறுவனங்களின் மையமாக விளங்கி வருகிறது. வடசென்னை தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. ‘வடசென்னை பொருளாதாரம்’ என்ற தலைப்பிலான இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம், வடசென்னையின் தொடக்கக் காலப் பொருளாதார நிலை, இன்றையப் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை முன்னேற்றம், வணிகச் சூழல், துறைமுகம் சார்ந்த பொருளாதாரப் பங்களிப்புகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் நிலை, மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரம் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவுகளும் மாற்றங்களும் ஆகியவற்றை ஆராய்ந்து ஆவணப்படுத்துவதாகும். இக்கருத்தரங்கு, வடசென்னையின் பொருளாதார நிலையை அறிந்து கொள்வதற்கும் எதிர்காலத்தில் வடசென்னையின் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய அணுகுமுறைகள், அரசின் திட்டங்கள், தொழில்முனைவோர் பெருக்கம் ஆகியன உருவாவதற்கும் வழிவகுக்கும்.
Following the success of its inaugural conference on Education and the second edition on Industries that contributed to the region’s development, Chevalier T. Thomas Elizabeth College for Women (CTTE) announces the third edition of its flagship research series on North Chennai.
As part of a four-part academic initiative documenting the region’s evolution, this edition places Economics at the core of inquiry. The conference will examine the key drivers of North Chennai’s economic landscape and its pivotal role in Tamil Nadu’s broader growth trajectory.
By examining the interplay between historical commerce, industrial clusters, informal labor markets, and state policy, this conference documents the complex economic evolution of North Chennai and its integration into Tamil Nadu’s broader development narrative. The forum provides an interdisciplinary platform for economists, industry leaders, scholars, policymakers, civil society advocates, and students to analyze how businesses, workers, and local communities drive—and experience—the region’s structural transformation.
Selected research papers, case studies, and panel proceedings will form the third volume in CTTE’s four-part publication series, documenting the rich economic history, structural changes, and future potential of North Chennai.
‘வடசென்னை பொருளாதாரம்’ என்ற தலைப்பிலான இப்பன்னாட்டுக் கருத்தரங்கிற்குப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் ஆகியோரிடமிருந்து பின்வரும் தலைப்புகளையொட்டி கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
போன்ற தலைப்புகளில் வடசென்னையை மையப்படுத்தி ஆய்வாளர்கள் கட்டுரைகள் வழங்கலாம்.
புள்ளி விவரங்கள், களஆய்வு, நேர்காணல்கள், அரசு அறிக்கைகள் மற்றும் வரலாற்று ஆவணங்களை ஆதாரங்களாகப் பயன்படுத்துவது கட்டுரையின் தரத்தை உயர்த்தும்.
For the international conference titled “The Economy of North Chennai,” researchers are invited to present papers centering on North Chennai under the following topics:
Bank Name: State Bank of India
Beneficiary Name: C.T.T.E. College
Branch: Perambur, Chennai
Account Number: 10313551041
IFSC Code: SBIN0002256
Address: 1/110, Madhavaram High Road, Perambur, Chennai-11
The registration fee can be paid through NEFT (or) G-pay using the bank transfer option.
Honourable Justice . B. Gokuldas
Former Judge , Madras High Court,
Chairman, C.T.T.E. Trust.
Thiru. L. Palamalai I.A.S. (Retd.)
Managing Trustee & Correspondent,
C.T.T.E. Trust.
Dr. S. Sridevi
Principal,
C.T.T.E. College for Women.
Dr. P. J. Queency Asha Dhas
Vice-Principal,
Dean of Research & Assistant Professor,
Department of Corporate Secretaryship,
C.T.T.E. College for Women.
Mr. S. N. Thiyagarajan
Founder,
Revathi Home Needs.
Mr. T. Manivannan
Chairman,
Revathi Home Needs.
Mrs. M. Manjula
Managing Director,
Revathi Home Needs.
Mr. M. Kumaragurubaran
Managing Director,
Revathi Home Needs.
Mrs. K. Rajalakshimi
Managing Director,
Revathi Home Needs.
Mr. Charles Fransic
General Manager,
Revathi Home Needs.
Dr. Sumuki Padmanabhan
Chief Librarian,
CTTE College for Women
Miss. S. Gayathri
Sales Manager,
Revathi Home Needs.
Mr. X. Jerald Vinoth Kumar
Purchase Head,
Revathi Home Needs.
Mr. D. Mari Ganesh
Marketing Manager,
Revathi Home Needs.
Mr. C. A. Alex Babu
General Manager,
Millennium Papier India PVT Limited.
Coordinators
Mrs. M. Priyadharshini
Assistant Professor, Department of English,
CTTE College for Women
Mrs. J. Mary Catherine
Head, Department of Computer Science,
CTTE College for Women
Dr. A. Kasthuri
Assistant Professor, Department of Tamil,
CTTE College for Women